Home செய்திகள் கொரோனா எதிரொலி செங்கம் பகுதியில் மளிகை பொருட்கள் விலையேற்றம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கொரோனா எதிரொலி செங்கம் பகுதியில் மளிகை பொருட்கள் விலையேற்றம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுப்புற வட்டார பகுதியில் அதிகரித்து வரும் மளிகை பொருட்கள் விலையை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளதால், மளிகை பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. இதனால், பணமின்றி சிரமப்படும் ஏழை, எளிய மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாவட்ட மற்றும் பேரூராட்சி நிர்வாகம், அந்தந்த பகுதியில் இயங்கும், மளிகை கடைகளையும் கண்காணிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.எடை தராசுகள் முத்திரையிடப்பட்டு உள்ளதா, மளிகை பொருட்களின் விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது விலையேற்றம் குறித்து, பொதுமக்கள் தரப்பில் ஒருவர் கூறுகையில், ‘மளிகை பொருட்களை, மொத்தமாக கொள்முதல் செய்ததால்தான், விலை கட்டுக்குள் இருக்கும். உள்ளூரில் பொருட்கள் வாங்கி, வியாபாரம் செய்தால், விலை அதிகரிக்கத் தான் செய்யும்’ என்கின்றனர் இதுமட்டுமல்லாமல் மளிகை பொருட்கள் 50 சதவீதம் வரை உயர்த்தி உள்ளார்கள் இது ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மளிகைப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அடித்தட்டு மக்கள் மளிகை கடை பொருட்கள் வாங்கும் சூழ்நிலையில் இல்லை இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொரோனா நோய்த்தொற்று காரணம் காட்டி செங்கம் பகுதியில் மளிகை விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஆய்வு செய்ய வேண்டும். மளிகைப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்து விலைப்பட்டியல் வெளியே வைக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com