Home செய்திகள் ஆட்சிக்கு வந்ததும் வாஷிங் மெஷின்;செங்கம் வேட்பாளர் வாக்குறுதி

ஆட்சிக்கு வந்ததும் வாஷிங் மெஷின்;செங்கம் வேட்பாளர் வாக்குறுதி

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் எம்எஸ் நைனா கண்ணு மண்மலை, முறையார் கரியமங்கலம் ,அரட்டவாடி, தண்டா , புரச ப்பட்டு ,மேல் பெண்ணாத்தூர் ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் வாக்கு சேகரிப்பின் போது அங்குள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் மலர் தூவி வரவேற்றனர். தேர்தல் அறிக்கை கொண்ட துண்டு பிரசுரங்களை கொண்டு பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார் .அதிமுக வேட்பாளர் எம் எஸ் நைனா கண்ணு பேசுகையில் பெண்கள் கஷ்டப்பட்டு முதுகு வலிக்க துணி துவைத்த காலம் போதும். பெண்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும் என அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தல் அறிக்கையை விளக்கி வாக்குச் சேகரித்தார் மேலும் பொது மக்களின் அடிப்படை வசதி செய்து தருவோம் என்று வாக்குறுதி அளித்தார் நிகழ்வின்போது தெற்கு மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், சக்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் பாபு வெங்கடாஜலபதி ,செங்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் கே கே மணி, மாவட்ட பிரதிநிதி மேல் பெண்ணாத்தூர் முருகன், பிரதிநிதி ராஜன் முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டன

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com