Home செய்திகள் செங்கம் அடுத்த இறையூர் கிராமத்தில் மயான சூறை பிரம்மோற்சவ திருவிழா

செங்கம் அடுத்த இறையூர் கிராமத்தில் மயான சூறை பிரம்மோற்சவ திருவிழா

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 65ம் ஆண்டு மயான சூறை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. செங்கம் காவல்துறை கண்காணிப்பாளர் சரவணகுமரன் தலைமை தாங்கினார். செங்கம் வட்டாட்சியர் மனோகரன் இறையூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இறை மாணிக்கம் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த திருவிழாவில் கரகம் பாலித்து ரெட்டி குளக்கரையில் முப்பூசை நடைபெற்றது. பக்தர்கள் முள் மீது நடந்து தமது வேண்டுதலை நிறைவேற்றும் நிகழ்வு, கொதிக்கும் எண்ணையில் வடை சுடுதல், செடல் சுற்றுதல் , தேர் இழுத்தல் போன்ற நிகழ்வுகள் கடைசி நிகழ்வாக மயான சூறை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் சிறப்பம்சமாக நடைபெற்றது.. திருவிழாவை காண இறையூர் கிராமத்தை சுற்றியுள்ள அம்மாபாளையம், கண்ணகுருக்கை ,பாச்சல், கோளாப்பாடி கிராமப்புற பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு மற்றும் விழா குழுவினர் தாமோதரன் வெங்கட்ராமன் நாயுடு கோவிந்தசாமி மணி கண்டன் ஜெயராஜ் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com