Home செய்திகள் செங்கத்தில் சேம்ப் சமூகப்பணி மையத்தின் மகளிர் தின விழா.

செங்கத்தில் சேம்ப் சமூகப்பணி மையத்தின் மகளிர் தின விழா.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பக்கரி பாளையம் கிராமத்தில் சமூகப்பணி மையத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு சகாய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கரோலின் சாந்தி தலைமை தாங்கினார் மையத்தின் தலைமை சகோதரி ஏடல் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ஷீலா அனைவரையும் வரவேற்று பேசினார் மையத்தின் இயக்குனர் அருட்சகோதரி கவிதா அறிமுகவுரை பேசினார். அப்போது பக்கிரிபாளையம் சமூகப் பணி மையம் மகளிர் குழு அமைத்தல், ஆடை தயாரித்தல், மெழுகுவர்த்தி பினாயில் போன்றவை தயாரித்தல், மணி பின்னுதல், போன்ற பயிற்சிகளும் மாணவர்களுக்கு கணினி பயிற்சிகளும் போன்றவைகள் அளித்து வருகிறோம். கிராமங்களில் மரம் வளர்த்தல், மழைநீர் சேகரிப்பு, தூய்மை பணிகள் போன்ற விழிப்புணர்வுகளும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்புகளும் நடத்தப்படுகின்றன கிராமங்களில் மகளிர் தினவிழா குழந்தைகள் தின விழா பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டன காலத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அரிசி மளிகை பொருட்கள் ஏழை குடும்பங்களுக்கு உதவிகளும் செய்யப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார் நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக ஆன்மீக சொற்பொழிவாளர் செங்கம் ரெட்கிராஸ் செயலாளர் தனஞ்செயன் கலந்துகொண்டு பேசினார். அருட்சகோதரி கரோலின் சாந்தி பேசும்போது : பெண்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.உழைப்பு, முயற்சி,. தன்னம்பிக்கை மூன்றும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். இன்றைய சமூகத்தில் பெண்கள் தனித்துவத்துடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். குடும்பத்தையும் பணியையும் சரியாக கையாள கற்றுக் கொள்ள வேண்டும். எந்த சூழலிலும் எவ்வளவு பெரிய குடும்பத்தில் இருந்தாலும் குடும்பம் குழந்தைகள் என்று ஒதுங்கி விடாமல் தாங்கள் படித்த படிப்புக்கு ஏதாவது ஒரு பணியை கட்டாயம் செய்ய வேண்டும். மகனோ மகளோ யாராகினும் முக்கியமாக பெண்களை மதிக்கவும். குடும்பத்தில் பரஸ்பர உதவிகள் செய்யவும் ஒவ்வொரு தாயும் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் டெல்லி தமிழ்நாடு இல்லம் முன்னாள் கணக்கு அதிகாரி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான செங்கம் ராஜன் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மேல்பூழுதியுர் முருகன், பக்கிரிபாளையம் தூதுமுனியன், கலைச்செல்வி வெங்கடேசன் மேல்ராவந்தவாடி மணிகண்டன் , புளியம்பட்டி சிவஞானம், மேல் வணக்கம் பாடி கோவிந்தசாமி, பக்கரி பாளையம் துணைத்தலைவர் ஷர்பூதீன், இளைஞர் இளம்பெண்கள் பிரதிநிதி சத்யா முருகன் மற்றும் அருட்சகோதரி ஜான் மேரி, மைய பணியாளர்கள் மகளிர் குழுவினர் கலந்து கொண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com