Home செய்திகள் மீண்டும் தலைதூக்குகிறதா சிலை கடத்தல்?

மீண்டும் தலைதூக்குகிறதா சிலை கடத்தல்?

by mohan

செங்கம் அருகே ஐம்பொன் சிலையை மீட்டுத் தரக்கோரி அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை மா.வட்டம் செங்கம் அடுத்த புதூர் கிராமத்தில் பிள்ளையார் திருக்கோயில் அமைந்துள்ளது அங்கு பழமையான ஐம்பொன்னால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது புதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த இல்லையா கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், பிள்ளையார் ஐம்பொன் சாமி சிலை திருடிச்சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் ஒவ்வொன்றும் 30 கிலோ எடைகொண்டவையாகும். இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் புதுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் புகாரை பெற்றுக்கொண்ட புதுப்பாளையம் போலீசார் விரைவில் சிலையை கடத்திய மர்மநபர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து ஊர் நாட்டாண்மை கோபி , கோயில் தர்மகர்த்தா லட்சுமணன் ஏழுமலை குமார் ஊர் பொதுமக்கள் கூறியதாவது இந்த கோவில் மிகவும் 30 வருட பழமை வாய்ந்ததாகும். இத்திருக்கோயிலில் பல்வேறு விழாக்கள் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன பிரசித்தி பெற்ற இந்த திருக்கோயில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஐம்பொன்னால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலை திருடு போனதனால் அப்பகுதி மக்கள் பெரும் வருத்தத்துடன் இருந்து வருகின்றனர் மேலும் காவல் இதயத்தில் புகார் அளித்துள்ளோம் இதனை உடனடியாக மீட்டு தர இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழமை வாய்ந்த பிள்ளையார் கோவில் ஐம்பொன் சிலை திருடுபோன சம்பவத்தால் அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் உள்ளனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com