Home செய்திகள் செங்கம் அரசு பள்ளி ஆசிரியருக்கு மாநில விருது.

செங்கம் அரசு பள்ளி ஆசிரியருக்கு மாநில விருது.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் அரசுப் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தமிழ்கனி பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 18 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக பல சாதனைகள் புரிந்து நிகழ்த்தி வருகிறார். பள்ளி மாணவர்களை பல்வேறு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க செய்து தேசிய, அளவிலும் மாநில அளவிலும் பெயர் பெற்றுள்ளனர். இதுவரை 250 குழந்தை விஞ்ஞானிகளை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.மேலும் பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆய்வுக் கட்டுரை சிறந்த கட்டுரையாக தேர்ந்தெடுத்து கர்நாடகா மாநிலத்தில் தேசிய அறிவியல் கழகத்தின் சார்பில் நடந்த மாநாட்டில் சமர்பித்து இடம்பெற்றுள்ளனர். மேலும் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு , அறிவியல் கண்காட்சிகள் தென்னிந்திய அளவில் விருது பெற்றுள்ளார். இது போன்று பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.அண்மையில் நடைபெற்ற கல்வித்துறை சார்பில் நடந்த விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை சார்பாக துறையின் முதன்மை செயலாளரும் மாநில அறிவியல் நகரம் துணைத் தலைவர்( கூடுதல் பொறுப்பு ) ராஜேஷ்லக்கானி அவர்களால் வழங்கி கௌரவித்தனர். இவ்விருது 2019 2020 ஆம் கல்வி ஆண்டில் தாவரவியல் துறைக்கான விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற அறிவியல் ஆசிரியர் தமிழ்கனிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது பாராட்டு விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், செங்கம் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார், பள்ளி கல்வி துணை ஆய்வாளர்கள் குமார் குணசேகரன் முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளரும் பள்ளி தலைமையாசிரியர் அண்ணாமலை பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com