கொட்டாவூர் அரசு பள்ளியில் ஓவிய போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் பரிசு .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மூலமாக சுவரில் ஓவியம் வரையும் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் ந.தமிழ்செல்வி தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பரிமளா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரளா ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி ஆசிரியர் செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார். ஓவியப் போட்டியில் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் சுப.கோவிந்தராஜ் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். உடன் பள்ளி ஆசிரியர்கள் செல்வி, இந்துமதி, காய்த்ரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.