
திருவண்ணாமலை மாவட்டம் ஊர் கவுண்டனூர்,பன்றேவ், கிளையூர் உள்ளிட்ட 25ஜவ்வாது மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து கிராமத்திற்கும் மையமாக உள்ள கிளையூர் கிராமத்தில் அம்மா மினிகிளினிக் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மினி கிளினிக்அமைய உள்ள இடத்தினை கடந்த 3 வார காலமாக மருத்துவ அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் குறிப்பாக கிளையூர்கிராமத்தில் வேறு எந்த பயன்பாட்டிலும் இல்லாத ஒரு அரசுக் கட்டிடம் உள்ளது. அதில்அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளதை ஏற்று வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான கிளையூர் எம் சி அசோக் ஆகியோர் பார்வை செய்தனர்
You must be logged in to post a comment.