Home செய்திகள் கலசப்பாக்கம் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கலசப்பாக்கம் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட காரப்பட்டு கூட்ரோடு பகுதியில் சட்டமன்ற அலுவலகம் கணபதி பூஜை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பாரதிய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. அதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, மாவட்ட பொது செயலாளர், சட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான கே.ரமேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.சேகர், முன்னாள் மாவட்டத் தலைவர் நேரு, விஜயன், தர்மன்,இறை மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்தும், தேர்தல் பொறுப்பாளர்கள் பணிகள் மற்றும் கட்சி வளர்ச்சிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில், வருகின்ற 23 மற்றும் 24ம் தேதி பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வேலூருக்கு வருகையையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் 3 ஆயிரம் மேற்பட்டோர் கலந்து கொள்வது , சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மற்றும் கட்சியின் கொள்கைகளைக் கிராமங்கள்தோறும் கொண்டு செல்வது பற்றியும் எந்த மாதிரியான உத்திகளை சட்டமன்ற தேர்தலுக்கு கையில் எடுக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு பூத்துக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பணிகள் குறித்தும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இப்போதே சட்டமன்ற தேர்தலுக்கு மக்களை தயார்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. பொதுச்செயலாளர் சந்தோஷ்,மாவட்டச் செயலாளர் ஸ்ரீதேவி , மகளிர் அணி தலைவிசுகந்தி,கலசப்பாக்கம் மேற்கு ஒன்றிய தலைவர் குமரன் , கிழக்கு ஒன்றிய தலைவர் செல்வராஜ் , வடக்கு ஒன்றிய தலைவர் வெங்கடேசன், முருகன் பாலாஜி கருணானந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், கேந்திர பொறுப்பாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com