
தமிழக முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தமிழக துணை முதலமைச்சர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர்களின் உத்தரவின்படி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கழக விவசாயப் பிரிவுச் செயலாளரும் மாவட்ட ஆவின் தலைவருமானஅக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி பரிந்துரையின் படி ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளும், ஊராட்சி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம். சி.அசோக் தலைமையில் ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு எம் கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட கழக செயலாளர் சந்தித்து ஆசி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பாக கட்சி பணியாற்ற ஆலோசனை வழங்கினார். பெரு முட்டம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் மகேந்திரன் தன்னை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக நியமித்ததற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
You must be logged in to post a comment.