Home செய்திகள் செங்கம் காவல் உட்கோட்ட கிராம விழிப்புணர்வு குழு சார்பில் கிராமபுற இளைஞர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம்

செங்கம் காவல் உட்கோட்ட கிராம விழிப்புணர்வு குழு சார்பில் கிராமபுற இளைஞர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம்

by mohan

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் காவல் உட்கோட்டம் விவிபிஒ கிராம விழிப்புணர்வு குழு சார்பில் கிராமபுற இளைஞர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம் செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணாமேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளியில்செங்கம் காவல் உட்கோட்டம் விவிபிஒ கிராம விழிப்புணர்வு குழு சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்னோடி வங்கி ரீடு தொண்டு நிறுவனம் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் இணைந்து கிராம புற இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் பயிலரங்கம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சி செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் தலைமையில் நடைபெற்றது ரீட் தொண்டு நிறுவனம் இயக்குனர் வழக்கறிஞர் தனஞ்செயன் அனைவரையும் வரவேற்று பேசினார். செங்கம் காவல் ஆய்வாளர் கோமதி,மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். மாவட்ட வேலைவாய்ப்பு உதவியாளர் சுமதி ,இந்தியன் வங்கி மேலாளர் சம்பத், சென்னை பல்கலைக்கழக பையோ டெக்னாலஜி துறைத்தலைவர். திருவண்ணாமலை கால்நடை மருத்துவர். பாலமுருகன், டிஜிட்டல் சர்வீஸ் இமயவர்மன் உதவி வேளாண்மை அலுவலர் விபூஷ்ணன். ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர் மற்றும் ரீட் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் ஏழுமலை பங்கேற்று நன்றி உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் 50 மேற்பட்ட கிராம புற இளைஞர்கள் இந்த பயிலரங்கில் பங்கேற்று பயனடைந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com