
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அமைந்துள்ள சுமார் 1600 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு அனுபாம்பிகை சமேத ஸ்ரீ ரிஷபேஸ்வரர் ஆலயம் புதுப்பித்தல் மற்றும் பாலாலய கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பந்தக்கால் நடும் பூஜை நடைபெற்றது சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயமானது இதுவரையிலும் கும்பாபிஷேகங்கள் செய்யப்படாமல் இந்து சமய அறநிலைத்துறையினரும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த நிலையில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் ஆன்மீகவாதிகள் இத்திருக்கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும் போதும் அதற்கான முயற்சிகள் முழுவதும் தொடர்ந்து பல ஆண்டுகளாக தடைபெற்று வந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்து அறநிலைத்துறை ஒப்புதலோடு செங்கம் பகுதி சமூக ஆர்வலர்கள் ஆன்மீகவாதிகள் பொதுமக்கள் பல்வேறு கோவில் மன்றங்களை சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து இத்திருக்கோயிலை புதுப்பித்து பிரமாண்டமான முறையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் இந்த ஆலோசனை கூட்டம் கணேசர் குருப்ஸ் வழக்கறிஞர் கஜேந்திரன் மற்றும் ரவீந்திரன், ராமகிருஷ்ணா பள்ளி தாளாளர் பாண்டுரங்கன்,மேலப்பாளையம்பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணன் ஜெயவேல். மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் நடத்துனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.உடன் பிரதோஷ வழிபாடு மற்றும் சதுர்த்தி வழிபாடு மன்றத்தினர் பங்கேற்றனர்ஏராளமானோர் கலந்து கொண்டு விரைவில் பணி தொடங்க ஒன்றிணைந்து செயல்படுவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .இப்பணி துவங்குவதற்கு பணிகள் தொடங்கு வதையொட்டி செங்கம் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.மிகவும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாதந்தோறும் சனிமகா பிரதோஷம்,கோ பூஜை 1008 சங்காபிஷேகம் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் நடைபெறும். சிறப்பு அலங்காரத்தில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.இந்த பூஜைகளின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்துவது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.