அதிமுக பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழா;

திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் அடுத்த கல்லாத்தூர் மு. ஊராட்சி மன்ற தலைவர் எம்.சி.அசோக்-சரசு இல்ல திருமண வரவேற்பு விழா முன்னாள் அமைச்சரும் ,மாநில கழக விவசாயப் பிரிவு செயலாளரும் ,திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஜமுனாமரத்தூர் ஒன்றிய கழக செயலாளர் வெள்ளையன், மு. ஊராட்சி மன்ற தலைவர் சரசு அனைவரையும் வரவேற்று பேசினார். மணமக்கள் கோபிசங்கரன் குமாரத்தி ஆகியோரை கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வாழ்த்தி அருளாசி வழங்கினார். விழாவில் செங்கம் மகரிஷி பள்ளி தாளாளர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், வழக்கறிஞர் தினகரன், செல்வம் ,நகர அம்மா பேரவை செயலாளர் குமார் ,மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் கே.கே.மணி, தொம்பரெட்டி ஒன்றியக்குழு தலைவர் ஜீவா மூர்த்தி , மு. பேரூராட்சி மன்ற தலைவர் பத்மா முனிகண்ணு, ஒன்றிய கவுன்சிலர் மேல் பெண்ணாத்தூர் முருகன் முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன் உட்பட மாவட்ட நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தினர்.ஒன்றிய விவசாய பிரிவு தலைவர் வெள்ளையன், கிளையூர் விஜயரங்கன் ஆகியோர் நன்றி கூறினர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்