Home செய்திகள் அதிமுக ஆட்சியின் சாதனைகளை அனைத்து மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்;மாவட்ட செயலாளர் வேண்டுகோள்.

அதிமுக ஆட்சியின் சாதனைகளை அனைத்து மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்;மாவட்ட செயலாளர் வேண்டுகோள்.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றிய நகர ஆயி அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் செங்கம் மகரிஷி முன்னிலை வகித்தார் மாவட்ட துணை செயலாளர் அருணாச்சலம் அனைவரையும் வரவேற்று பேசினார் . திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்; வரும் 2021 ஆம் ஆண்டு செங்கம் தொகுதியில் யார் வேட்பாளராக அதிமுக தலைமை நிறுத்தினாலும் அவரை வெற்றி பெறச் செய்ய கட்சி நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும். என்று பேசினார்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் மண்டல பொறுப்பாளருமான மோகன் கலந்து கொண்டு பேசியதாவது; சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஒற்றுமையுடன் கடுமையாக மீண்டும் அதிமுக ஆட்சி அமைய சபதம் ஏற்க வேண்டும் அதற்கான தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும் முதல்வர் பழனிசாமி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பல நல்ல திட்டங்களை நிதி ஒதுக்கீடு செய்து செம்மையாக செய்து வருகிறார் பத்தாண்டு கால சாதனங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் அறிந்துகொள்ளும் வகையில் தொண்டர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் நயினா கண்ணு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் சுனில் குமார், மாவட்ட பேரவை செயலாளர் வெங்கடேசன் மேல்வணக்கம்பாடி கிளை செயலாளர் தாமரைச்செல்வி கூட்டுறவு சங்கத் தலைவர், புதுப்பாளையம் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் குமார் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் கே.கே.மணி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பத்மா முனிகண்ணு வழக்கறிஞர்கள் தினகரன், செல்வம், இலக்கிய அணி செயலாளர் தனஞ்செயன், கூட்டுறவு சங்க தலைவர் குமார், சங்கர் ,ரவி, ஒன்றிய கவுன்சிலர் முருகன் , மேல் பெண்ணாத்தூர் ஏழுமலை, முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன், கஜேந்திரன் உள்ளிட்ட செங்கம் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!