தி.மலை எக்ஸ்னோரா சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கௌரவிப்பு

திருவண்ணாமலை கணேஷ் இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற்ற எக்ஸ்னோரா 26ஆம் ஆண்டு விழாவிற்கு மாவட்ட எக்ஸ்னோரா தலைவர் பா இந்த ராஜன் தலைமை தாங்கினார். சிவா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனர் மற்றும் மாவட்ட எக்ஸ்நோர துணைத்தலைவர் சிவஞானம், எக்ஸ்னோரா புரவலர் மண்ணுலிங்கம், வர்த்தகர்கள் சங்க தலைவர் தனகோட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எக்ஸ்னோரா தலைவர் கோவிந்தராஜன் விழாவில் பேசியதாவது; எக்ஸ்நோர இன்டர்நேஷனல் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான நிர்மல் அவர்களின் ஆலோசனையின் பேரில் திருவண்ணாமலை கடந்த ஆண்டுகளில் பல்வேறு தூய்மை பணிகள் மரம் நடுதல், குளம் தூர்வாருதல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தூய்மை பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பிற பணிகள் செய்து வருகின்றோம். நற்பணிகள் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் எக்ஸ்னோரா தூய்மைப் பணி மேற்கொள்ளும் என்று பேசினார். எக்ஸ்னோரா 26 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சமூகப் பணி ஆற்றிவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.மற்றும் சமூகப்பணி செய்தோருக்கு பரிசு சால்வை அணிவிக்கப்பட்டது . விழாவில் மாவட்ட நிர்வாகி பானுமதி ராமமூர்த்தி, நந்தினி பதிப்பகத்தார் சண்முகம், டிராபிக் வார்டன் கணபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.