
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் நடுநிலைப்பள்ளியில்கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பில் வயதுவந்தோர் கல்வி திட்ட தொடக்க விழா நடைபெற்றது நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் விஜய் முகாமை விளக்கேற்றி தொடக்கி வைத்து பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் பேசியதாவது;அடிப்படை கல்வியான எண்ணும், எழுத்தும் கற்பிக்கப்படும். வங்கிக் கணக்கை பராமரிக்கவும் பஸ் எந்த சாலையில் செல்கிறது என்பதைப் படித்து அறியவும் இப்பயிற்சி முகாம் மொத்தமும் கல்லாமையை இல்லாமை ஆக்குவதே இப்பயிற்சி நோக்கமாகும் . என்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணுப்பிள்ளை ,ஊராட்சி மன்ற துணை தலைவர் விசாலாட்சி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேல்பெண்ணாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்வம் சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட 80 வயதுக்கு உட்பட்ட கல்லாதோர் 20 பேர் பங்கேற்றனர் ஆசிரியர்கள் சங்கீதா, தனலட்சுமி, நாராயணன், அரசு , மகேஸ்வரி, ஆகியோர் பயிற்சி அளித்தனர் . ஆசியர்கள் ராஜா ஆறுமுகம் சாந்தி வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி பட்டதாரி ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.