போளூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியேற்று நிகழ்ச்சி – ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பங்கேற்பு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் பஸ் நிலையம் அருகில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணைத்தலைவர் என். முகம்மது சுல்தான், வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.மாலிக் தலைமை வகித்தார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஆர். அப்துல் சத்தார் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். போளூர் நகரத் தலைவர் என். முஜீப் வரவேற்புரையாற்றினார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் ஹாஜி டி. எம். பீர் முகமது, மாவட்ட செயலாளர் செய்யது உசேன் , மாவட்ட பொருளாளர் எஸ். மாலிக், நகர பொருளாளர் எச். இம்ரான், வி. இசட்.முகமது அலி முன்னிலை வகித்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைத் தலைவரும், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் ஹாஜி கே. நவாஸ்கனி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தனர். மாநில செயலாளர் ஹாஜி. கே. எம். நிஜாமுதீன், மாநில துணை செயலாளர் ஏ. எஸ். இப்ராஹிம் மக்கி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். போளூர் நகர நிர்வாகிகள் ஏ.ஹபிபுல்லா, எச். ஜபார், ஏ.துராப்கான்,பி.பாபர் , முகமது கயாஸ், வந்தவாசி ஜே மன்சூர் அலி, வடக்கு மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் ஜே. முகம்மது ரஃபி, ஐ.நவீத், என் .அக்பர் அலி, பி. நூருல்லா, பி . நஸ்ருள்ள, பர்க்கதுள்ள, என். சுஜித், களம்பூர் முகமது அலி, அலீம் பாஷா , சனாவுல்லா, ஜான் பாஷா, முகம்மது இஸ்மாயில், வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜே. தாவூத், மாவட்ட துணை செயலாளர் எம் . சவுக்கத் அலி,போளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆசை தம்பி, எம்.எம். ஆர். முனீர், வக்போர்டு பள்ளிவாசல் முத்தவல்லி அசரப் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட, நகர, பிரைமரி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். போளூர் நகர செயலாளர் எம். அசேன் பாஷா நன்றி உரையாற்றினார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்