இராஜபாளையத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சத்துமிக்க தானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடத்தப்பட்டது…

இராஜபாளையம் வட்டாரத்தில் மேலராஜகுலராமன் கிராமத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சத்துமிக்க தானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடத்தப்பட்டது.

இப்பயிற்சியில் வேளாண்மை இணை இயக்குனர் திரு உத்தன்டராமன், வேளாண்மை துணை இயக்குனர்( மத்திய திட்டம் திரு திருமதி வனஜா , வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா , வேளாண்மை அலுவலர் பாக்யராஜ் மற்றும் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு சிறு தானிய உற்பத்தி சம்பந்தமாக பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் மக்காச்சோளத்தில் படை தாக்குதல் கட்டுப்படுத்தல் சம்பந்தமாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாட்டை உதவி வேளாண்மை அலுவலர்  வேல்முருகன் ஏற்பாடு செய்திருந்தார்.

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..