தேனி மாவட்டத்தில் ஆவணம் இல்லாத ரூபாய் 1,60,000 பறிமுதல்,..

தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் தேர்தல் விதிமுறைப்படி ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், இன்று (15/03/2019) தேர்தல் அதிகாரி விஜயன் அவர்கள் தலைமையில் சிறப்புச் சார்பு ஆய்வாளர் சுதாகர், ஏட்டையாவசந்தகுமார், மகளிர் காவலர் uஷ்பா ஆகியோர் சின்னமனூர் அருகே கண்ணம்மா கோவில் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர், அப்பொழுது தேனியிலிருந்து வந்து கொண்டிருந்த வேகனர் காரை மறித்து சோதனை செய்துள்ளனர், காரில் ரூபாய் 1,60 .000 இருப்பது தெரிய வந்துள்ளது, காரில் வந்தவர்கள் ஓடைப்பட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் திருக்குமார் என்பதும், இவர் பெப்ஸ் மெத்தை வியாபாரம் செய்து வருவதாகவும், கூறியுள்ளார் முறையான ஆவணம் கொடுக்கப்படாததால் பணத்தைப் பறிமுதல் செய்து உத்தமபாளையம் துணை சார்நிலைக் கருவல அலுவலர் திரு,M, கணேஷ் குமார் அவர்களிடம் ஒப்படைத்தனர்