மதுரையில் பறக்கும் படையினரால் ₹.5 கோடி மதிப்புள்ள நகை பறிமுதல்…

மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி டோல்கேட் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையின் போது உரிய ஆவணங்களின்றி சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பிடிபட்டது.

இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்புடன் இந்த வாகனத்தை கொண்டு சென்றனர். மாவட்ட ஆட்சியாளர் பார்வையிட்ட பின் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சுமார் ஐந்தரை கோடி நகை பிடிபட்டது மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்