Home செய்திகள் விதைப்பந்துகள் தயார் செய்து பள்ளி மாணவ மாணவிகள் சாதனை; பொதுமக்கள் பாராட்டு..

விதைப்பந்துகள் தயார் செய்து பள்ளி மாணவ மாணவிகள் சாதனை; பொதுமக்கள் பாராட்டு..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டம் வல்லம் நேஷனல் பள்ளி மாணவ மாணவிகள் ஒரு லட்சம் மர விதைகளைக் கொண்டு 18,000 விதைப்பந்துகளை செய்து சாதனை படைத்துள்ளனர். மேலும் அந்த விதைப்பந்துகளை சமூகப் பொறுப்புடன் மலைப் பகுதிகளில் விதைக்க மணிமுத்தாறு ஒன்பதாவது பட்டாலியனிடம் ஒப்படைத்தனர். சாதனை படைத்த வல்லம் பள்ளி மாணவ மாணவிகளை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் பெரிதும் பாராட்டினர். டாக்டர் அப்துல் கலாமின் கனவு திட்டமான மரம் வளர்ப்பை ஆதரித்து அதிகரிக்கச் செய்யும் பணியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் தமிழகம் முழுவதும் பயணம் செய்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விதைப்பந்துகள் குறித்தும், பூமியின் பசுமையை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், தென்காசி மாவட்டம் வல்லம் நேஷனல் பள்ளி குழந்தைகள் மத்தியில் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளித் தாளாளர் அப்துல் மஜீத், முதல்வர் சித்திகா பர்வீன் தங்கள் பள்ளி மாணவ மாணவியரை 18,000 விதைப்பந்துகள் செய்ய வைத்தனர். செய்யப்பட்ட விதைப்பந்துகளை மழை தரும் மரங்களாக மாற்ற மணிமுத்தாறு பட்டாலியன் மலைப் பகுதிகளில் போலீஸ் உதவியுடன் தூவிட மணிமுத்தாறு ஒன்பதாவது பட்டாலியன் கமாண்டண்ட் கார்த்திகேயனை பூ. திருமாறன் தொடர்பு கொண்டார். அதன் அடிப்படையில் வல்லம் நேஷனல் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் போலீஸ் பட்டாலியன் துணை கமாண்டன்ட் தீபா, இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் பலர் விதைப்பந்துகளை தூவும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் பேசிய பூ. திருமாறன், தாமிரபரணியின் உற்பத்தி இடத்தில் மழை பொழிவு நன்றாக இருந்தால் 7 மாவட்டங்கள் வறட்சியில் இருந்து விடுபட்டு வளம் பெறும் என குறிப்பிட்டார்.

பள்ளி குழந்தைகள் மற்றும் போலீஸ் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டது பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. சமூகப் பொறுப்பை வளரும் பிள்ளைகளுக்கு இது போன்ற செயல்கள் மூலமாக ஒவ்வொரு பள்ளியும் கற்றுக் கொடுக்க வேண்டுமென காவல்துறையினர் தெரிவித்தனர். மாணவ மாணவிகளுக்கு “கோடியில் ஒருவர்” பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மணிமுத்தாறு பட்டாலியன் பகுதியில் காவலர் சக்தியும், மாணவ சக்தியும் இணைந்து விதைப்பந்துகளை பூமிக்கு அர்ப்பணித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லம், வல்லம் நேஷனல் பள்ளி, வீசெர்வ் பவுண்டேஷன், பெண் உலகம் அமைப்பு மற்றும் போலீஸ் பட்டாலியன் இணைந்து ஒரு கோடி மரங்களை உருவாக்கியே தீருவதென அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!