இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் ராஜேந்திர பிரசாத் . இவர் தனது கடந்த பல ஆண்டு கால சொந்த முயற்சியால் தோணித்துறை பகுதியில் கடற்பாசி மியூசியம் உருவாக்கியுள்ளார். தனது அன்றாட வருமானத்திற்கு உழைத்தது போக எஞ்சி நேரத்தை மியூசியம் உருவாக்க செலவிட்டுள்ளார்.
கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 300 வகை பாசிகளில் 160 வகை பாசி வகைகளை இந்த மியூசியத்தில் பாதுகாத்து வருகிறார். இதுவரை எம்.எஸ்சி., எம்.பில்., மாணவர்கள் 485 பேருக்கும், ஆராய்ச்சி முனைவர்கள் 70 பேருக்கு கடல்பாசி குறித்து ஓசையின்றி வழிகாட்டியாக இருந்துள்ளார். பாசி வகைகளை பதப்படுத்தியும், அட்டவணைபடுத்தியும், உயிருடன் வளர்த்து பாதுகாத்து வருகிறார்.
முன்னாள் ஜனாதிபதி கலாம் வழிகாட்டலின் கீழ் அழைப்பின் பேரில் பல கல்லூரிகள் சென்று கடற்பாசி கண்காட்சி நடத்தி வருகிறார். அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை கடற்பாசிகளை பாதுகாக்கும் விதமாக ஆர் கே ஆல்கே புராஜக்ட் சென்டர் என்ற நிறுவனத்தை மண்டபம் தோணித்துறை கடற்கரையில் குடிசையில் பராமரித்து வருகிறார். அழிந்துவரும் கடற்பாசிகளை தொட்டிகளில் வளர்த்து கடலில் விட அரசின் உதவியை எதிர் நோக்கி உள்ளார். இவரது முயற்சியை மீன்வள துறை மற்றும் மத்திய கடல் சார் மீன்வள ஆராய்ச்சி கூடம் அங்கீகரிக்கும் பட்சத்தில் கடற்பாசிகள் பாதுகாக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
இந்த சாதனையாளரை வாழ்த்த விரும்பினால் 8220639480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.