இலங்கைக்கு கடத்த இருந்த 60 கிலோ கடல் அட்டை பறிமுதல்..

இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த இருப்பதா உச்சிப்புளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உச்சிப்புளி அருகே வாணிங்குளம் பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சொகுசு கார் ஒன்றில் இலங்கைக்கு கடத்துவதற்கு நன்று பதப்படுத்திய 60 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தெரிய வந்தது. கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட கோபு மற்றும் ஆனந்த ஆகிய இருவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் குற்றவாளிகளை மண்டபம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.