தனுஸ்கோடிக்கு சுற்றுலா வந்த மூன்று சிறுவர்கள் கடலில் விழுந்து பலி.. இருவரின் உடலை தேடும் பணி தீவிரம்…

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனுஸ்கோடிக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கடலில் குளித்த போது பலி இருவர் உடலலை தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் போலீஸ்சார் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் செலுகை கிராமத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆனந்தன், பூமிநாதன், ஜெகநாதன் ஆகியோர் குடும்பத்துடன் பள்ளி விடுமுறை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தனர்.

இதனையடுத்து இவர்கள் தனுஸ்கோடி அரிச்சல் முனைப்பகுதிக்கு பிற்பகல் சென்று அங்கு இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் குடும்பத்துடன் குளிந்துக்கொண்டு இருந்த போது கடலில் ஏற்ப்பட்ட சூழற்சி காரணமாக இன்பதமிழன் (15) சுவேதா (11); இனிதா (12) ஆகியோர் கடல் அலைகளால் இழுத்து செல்லப்பட்டனர். இதனை பார்த்த உறவினர்கள் இவர்களை மீட்க சென்ற போது இவர்களும் கடலில் இழுத்து செல்லப்பட்டனர்.

இதனையடுத்து பெண்கள் அழுது கூக்குரல் இட்டதில் அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனே அவர்களை மீன்பிடிக்கும் கயிறை பயன்படுத்தி மீட்ட நிலையில் மூன்று பிள்ளைகளை மீட்க முடியமால் தேடி வந்த நிலையில் இன்பதமிழனை மட்டும் மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் இன்பதமிழன் உயிரிழந்தார். இதனையடுத்து சுவேதா மற்றும் இனிதாவை மீனவர்கள், தீயனைப்புதுறையினர் மற்றும் போலீஸ்சார் ராமேஸ்வரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து இறந்த சுவேதா தந்தை பூமிநாதன் மாயமான இரண்டு பிள்ளைகளையும் கண்டுபிடித்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்தார். குழந்தைகளை இழந்தவர்கள் அழுது கதறியது பார்ப்பவர் நெஞ்சை பதறவைத்தது.