Home செய்திகள் கடலோர மேலாண் மண்டல வரைபடம் சீரமைப்புக்குழு ராமேஸ்வரத்தில்நேரடி கள ஆய்வு

கடலோர மேலாண் மண்டல வரைபடம் சீரமைப்புக்குழு ராமேஸ்வரத்தில்நேரடி கள ஆய்வு

by mohan

கடலோர மேலாண் மண்டலம் (CRZ) 2019 வரைபடத்தில் தமிழகத்தில் உள்ள 400 மீனவ கடற்கரை கிராமங்கள், பயன்பாட்டு பகுதிகள் இடம் பெறவில்லை என அரசிடம் புகார் தெரிவித்து வந்த மீனவர்கள் இது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டனர். இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டைய வரைபடத்தை மீனவர்கள் உதவியுடன் மீண்டும் வரைய பசுமை தீர்ப்பாயம் அவகாசம் அளித்தது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 188 கடற்கரை கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் மீனவர் பயன்பாட்டு பகுதியில் வரைபடத்தில் இல்லை. இது குறித்து கலெக்டரிடம் மீனவர்கள் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து குழு அமைத்து வரைபடத்தை வரையும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக கடலோர மேலாண் மண்டல வரைபடம் 2019ல் விடுபட்டு போன ராமேஸ்வரம் நடராஜபுரம் மீனவ கிராமத்தை வரைபடத்தில் வரைய வரைபட சீரமைப்புக்குழுவினர் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வந்தனர். இக்குழு ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை மேலாண் குழு உறுப்பினர் சேனாதிபதி சின்னத்தம்பி தலைமையில் நடராஜபுரம் மீனவரை சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த மாதிரி வரைபடம், திட்ட அறிக்கையை ராமநாதபுரம் கலெக்டரிடம் விரைவில் ஒப்படைக்க உள்ளனர்.

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com