Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் புதுகிழக்குதெரு குப்பைமேடு பகுதிகளுக்கு விஜயம்செய்யும் MLA MP அரசியல்கட்சி தலைவர்களுக்கு SDPI கோரிக்கை!!

கீழக்கரையில் புதுகிழக்குதெரு குப்பைமேடு பகுதிகளுக்கு விஜயம்செய்யும் MLA MP அரசியல்கட்சி தலைவர்களுக்கு SDPI கோரிக்கை!!

by ஆசிரியர்

கீழக்கரையில் 3_வது வார்டுகுட்பட்ட புதுகிழக்கு தெரு குப்பை மேடுபகுதியில் பூங்கா மற்றும் நடைபயிற்சி அமைக்க வேண்டும் என்று கீழக்கரைநகர் SDPI_கட்சி சார்பாக 2012 முதல் நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு முறை மனுக்கள் கொடுக்க பட்டு இன்று 18/08/2020 வரை தொடர்ந்து போராடி வருகின்றது. குப்பை மேடு பகுதியில் சுற்று சுவர் விரிசல் விட்டு மக்கள் மேலும் விழகூடிய அபாய நிலையில் இருந்தது அதை SDPI_கட்சி சார்பாக நகராட்சி நிர்வாகதிடம் மனு கொடுக்க பட்டு அந்த சுவர் இடித்து தள்ளபட்டது..

நடைப்பயிற்சி பூங்காஅமைக்கும் வரை SDPI_கட்சி இறுதி வரை போராடும்.. கீழக்கரையின் மக்களின் பல்வேறுகோரிக்கைகளை SDPI_கட்சி சார்பாக நிறைவேற்றபட்டது.

01)3_வது வார்டு குடபட்ட புது கிழக்குதெரு பள்ளம் பகுதியில் மக்கள் அதிகம் நடமாட்டம் பகுதியில் விஷதன்மை கொண்ட பாம்புகளின் நடமாட்டம் உள்ளது அதை அப்புற படுத்த வேண்டும் என்று மக்களின் கோரிக்கையை SDPI_கட்சி ஏற்று அந்த விஷ பாம்புகளை பிடித்து சரண ஆலயத்தில் ஒப்படைக்க பட்டது..

02)வெறி நாய்களின் தொல்லையால் குழந்தைகள் மற்றும் வயதான பெரியவர்கள் மற்றும் பள்ளி மாணவமாணவிகளையும் கடித்தது. மக்களின் புகார் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்திற்கு மனுக்கள் கொடுக்க பட்டு உடனடியாக வெறி பிடித்த நாய்களை அப்புற படுத்த பட்டது..

03)புது கிழக்கு தெரு பகுதி பள்ளம் பகுதியில் அதிகமாக மழை பெய்து ஒட்டு வீடு இடிந்து விழுந்தது அந்த பகுதியில் மக்களின் கோரிக்கையை ஏற்று  வீட்டிற்குள் இருந்த சில முக்கிய ஆவணங்களை கட்சியின் செயல்வீர்கள் எடுத்து முறையாக பாதிக்க பட்டவரிடம் ஒப்படைத்தனர் அன்று தாசில்தார் அவர்களிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு பாதிக்கபட்டவருக்கு உரிய இழப்பீட்டு கிடைக்க வழி வகை மேற் கொள்ள பட்டது..

04)மக்களின் அன்றாட பிரச்சினைகளான தெரு விளக்குகள், கால்வாய்நீர் பிரச்சினைகள்,சரி செய்யபட்டது.

05)மழை காலங்களில் டெங்கு கஷாயம் தொடர்ந்து மக்களுக்கு வழங்க பட்டது. பல்வேறு மக்களின் பிரச்சினைகளை சரி செய்ய பட்டது.

ஆளுங்கட்சி MKA மணிகண்டன் மற்றும் MP  நவாஸ் கனி  ஆகியோருக்கு கீழக்கரைமக்களின் சார்பாக கோரிக்கை.

01)கொரனா என்ற கொடிய வைரஸ் களால் தமிழகம் முழுவதும் இந்த மாத இறுதிவரை அரசுபஸ் போக்குவரத்து நிறுத்தபட்டுள்ளது..

தமிழக அரசு பஸ் போக்குவரத்து சரி செய்து  கீழக்கரையில் ஏர்வாடி முக்கு ரோடு வரை பஸ் வந்து திரும்பி செல்கின்றது. வரும் காலங்களில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் வரை வந்து மக்களை ஏற்றி செல்ல வழி வகை செய்ய வேண்டும் என்று மக்களின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறதை

02) மின்சாரவாரியத்தில்மின் கட்டணம் செலுத்துவதற்கு வெகு தொலைவில் உள்ளது.. மின் கட்டணத்தை செலுத்துவதற்கு பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்கள் மிகவும் சிரமபடுகின்றனர்.

பெண்களோ முதியவர்களோ ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால் கட்டணம் 150_ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.. ஆகையால் மின் கட்டணம் செலுத்தும் அலுவலகத்தை ஊரின் உட்பகுதிக்குள் கொண்டு வருமாறு மக்களின் சார்பாக கேட்டு கொள்கின்றோம்.

03)கொரனா என்ற கொடிய வைரஸ்களால் இராமநாதபுரம் சிலதனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்லும் மக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அலைகளிக்க படுகின்றனர். அது போன்று தனியார் மருத்துவமனையில் அலைகளிக்கா வழி வகை செய்ய வேண்டும் என்று மக்களின் சார்பாக கேட்டு கொள்கின்றோம்…

04)கீழக்கரைமக்களின் நீண்ட கால கோரிக்கையான கடல் நீரை குடிநீராக மாற்ற உடனடியாக வழி வகை செய்ய வேண்டும் என்று மக்களின் சார்பாக கேட்டு கொள்கின்றோம்…

05)தலைமை அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் பார்வை பார்க்கும் நிரந்தர மருத்துவர் மற்றும் செவிலியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று மக்களின் சார்பாக கேட்டு கொள்கின்றோம்…

06)நீண்ட கால கோரிக்கையான பிண வரையில் குளிர் சாதன வசதிகள் செய்ய வேண்டும் என்று மக்களின் சார்பாக கேட்டு கொள்கின்றோம். என SDPI கட்சி சாரபாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!