மத்திய அரசின் மீன்வள மசோதாவை தடை செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்….

மத்திய அரசின் மீனவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் புதிய மீன்பிடி மசோதாவால் மீனவர்கள் எண்ணற்ற துயரங்களை சந்திக்க நேரிடும் என்பதால் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கீழக்கரை புதிய பாலம் கடற்கரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மீனவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் மீனவர்களை நசுக்கும் நோக்கில் ஒன்றிய பாஜக அரசு செயல்படுவதாகவும் புதிதாக கொண்டுவர உள்ள ஒன்றிய அரசின் மீன்வளத் மசோதாவை ரத்து செய்யக் கோரி கீழக்கரை எஸ்டிபிஐ நகர் தலைவர் ஹமீது பைசல் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.