Home செய்திகள்கீழக்கரை செய்திகள் உச்சிபுளியில் காந்தி படுகொலை கண்டித்தும் விவசாயிகளுக்கு எதிரான வேளான் சட்டத்தை கைவிட கோரியும் மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன போராட்டம்…

உச்சிபுளியில் காந்தி படுகொலை கண்டித்தும் விவசாயிகளுக்கு எதிரான வேளான் சட்டத்தை கைவிட கோரியும் மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன போராட்டம்…

by ஆசிரியர்

இன்று (ஜனவரி,30, 2021) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெரியபட்டினம் டிவிசன் சார்பாக உச்சிபுளியில் RSS பயங்கரவாதி கோட்சையால் நம் தேச தந்தை மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான வேளான் சட்டத்தை கைவிட கோரியும் மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன போராட்டம் நடைப்பெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செய்யது முகம்மது இப்ராஹிம் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் இராமநாதபுரம் மேற்கு தொகுதி, தொகுதி தலைவர் அப்துல் ஜமீல் வருகை தந்து கண்டன உரை நிகழ்த்தினார்.

காந்தியை கொன்றவர்கள்! தேசத்தை கொள்கிறார்கள் என்ற கோசத்தை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இறுதியாக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சேக் தாவுத்  நன்றியுரையாற்றினார். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள், SDPI கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இதைப் போன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கேணிக்கரை, பனைக்குளம், மண்டபம், சிக்கல், அபிராமம், கீழக்கரை மற்றும் தேவிப்பட்டினத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com