Home செய்திகள்மாநில செய்திகள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு..! – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்..

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு..! – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்..

by Askar

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு..! – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்..

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராம பகுதிகளின் குடியிருப்புகள் விளைநிலங்களை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம்  அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்காக தங்களின் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் கைப்பற்றப்படும் சூழல் உள்ளதால், தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, 600 நாட்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் நடந்து முடிந்த  மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள்  முடிவெடுத்தனர். தேர்தல் நாளன்று வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வந்த போது, அதிகாரிகளுடன் கிராம மக்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் வட்டாட்சியர் கொடுத்த புகாரின் பெயரில் சுங்குவார்சத்திரம் போலீசார் 5 பிரிவின் கீழ் கிராம மக்கள் 10 பேர் மீது  வழக்கு பதிவு செய்துள்ளனர். சுப்பிரமணியன், கதிரேசன், கணபதி, பலராமன் , முனுசாமி, இளங்கோவன், கவாஸ்கர், சுதாகர், ஓம் பகவதி, விவேகானந்தன் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  ஏற்கனவே கிராம மக்கள் மீது  தடையை மீறி போராடியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் மற்றொரு வழக்கை  காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை பதிவு செய்துள்ளது.

தங்களின் உரிமைக்காக அறவழியில் ஜனநாயக ரீதியாக போராடி வரும் மக்கள் மீது, தொடர்ச்சியாக வழக்குகள் பதியும் அதிகார வர்க்கத்தின் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஆகவே உடனடியாக கிராம மக்கள் மீதான அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே தங்கள் விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் இழந்து தவிக்கும் கிராம மக்கள் மீது தொடர்ச்சியாக வழக்குகள் பதிந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com