கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக “விவசாயிகளின் எதிரி மோடி”.. வேளாண் சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம்..

கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளின் விரோதி மோடி என்கிற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமை உரையாற்றினார்.  அதை தொடர்ந்து  வரவேற்புரையை பொருளாளர் தாஜுல் அமீன்,  தொகுப்புரை நகர் செயலாளர் பகுருதீன்,  கண்டன உரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர தலைவர் அஹமது நதீர் மற்றும் வீரகுல தமிழர் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் ஆற்றினார்.

அதை தொடர்ந்து  Sdpi மாநில பேச்சாளர் ஜஹாங்கீர் அரூஸி கண்டன உரையாற்றினார்.  அதை தொடர்ந்து  சிறப்புரைநை தொகுதி தலைவர் அப்துல் ஜமீல் ஆற்றினார். நிகழ்ச்சியின்  நன்றி உரையை கிளை தலைவர் இப்ராஹிம் ஷா ஆற்றினார்.

இக்கூட்டத்திற்கு  முன்னிலை தொகுதி துணை தலைவர் நூருல் ஜமான், நகர் துணை தலைவர் ஹாஜா அலாவுதீன் மற்றும் ஜெயினுதீன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம் வகித்தனர். இக்கூட்டத்தில் திரளாக மக்கள் கலந்து கொண்டார்கள்.