Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கொரனா தொற்று கணக்கெடுப்பு பெயரில் மக்களிடம் ஏற்படும் அச்சத்தை நீக்க முன்வருமா கீழக்கரை நகராட்சி நிர்வாகம்?..

கொரனா தொற்று கணக்கெடுப்பு பெயரில் மக்களிடம் ஏற்படும் அச்சத்தை நீக்க முன்வருமா கீழக்கரை நகராட்சி நிர்வாகம்?..

by ஆசிரியர்

SDPI மாநில பொது செலாளர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கொரனா வைரஸ் தொற்றால் ஊரடங்கில் தனிமைப்பட்டிருக்கும் கீழக்கரை மக்களுக்கு சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த ஒரு மரணத்தின் எதிர் நடவடிக்கைகள் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கொரனா தொற்று கணக்கெடுப்பு பணிகள் பரவலாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் கீழக்கரையின் சில பகுதிகளில் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் நகராட்சி அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே கணக்கெடுப்பு என்று யார் வந்தாலும் ஒத்துழைக்க முடியாது என்று கடந்த மாதங்களில் NRC NPR போராட்டங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த மக்கள் வருகை தந்த அலுவலர்களிடம் முறையிட்டு கேள்வி எழுப்பி கொண்டிருந்தனர்.பாவம் வேலைக்கு வந்த கீழக்கரை நகராட்சி ஊழியர்களால் பதில் கூற முடியவில்லை.உடனே நான் தலையிட்டு இந்த சர்வே கொரனா சம்பந்தமாக மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.நாம் ஒத்துழைக்க வேண்டும் எனக்கூறி பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து SDPI கட்சி நகர் தலைவர் பைசலை தொடர்பு கொண்டு நடந்த நிகழ்வுகளை சொல்லி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள் என சில ஆலோசனை கூறினேன். ஏற்கனவே பீதியில் இருக்கும் மக்களிடம் அரசு சார்ந்த நடவடிக்கைகளுக்கு அனுக சுற்றறிக்கை,சமூக ஊடகங்கள்,ஜமாத்,கூட்டமைப்பு மூலமாகவோ அறியப்பட்ட அரசியல் நிர்வாகிகள் என யாரையாவது தொடர்பு கொள்ளுங்கள் உங்களோடு நாங்கள் வருகை தருகிறோம் என குறிப்பிட்ட சுகாதார நிர்வாகியிடம் sdpi நகர் தலைவர் பேசி உள்ளார். கூடுதலாக அவர் பெயரில் கீழக்கரை மக்களுக்கு அறிக்கை ஒன்றும் முகநூலில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று வேறு ஊழியர்கள் எனது பகுதியில் மீண்டும் அதே கணக்கெடுப்புக்காக வருகை தந்தார்கள். நேற்று போல் தொடர நானும் வந்தவர்களிடம் தெளிவுபடுத்தி சூழ்நிலையை உங்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள் எனக்கூறி அனுப்பிவிட்டேன்.(RSமங்கலத்திலிருந்து வருகை தந்ததாக சொன்னார்கள்.வருத்தமாக இருந்தது)

பொதுவான மக்கள் மனநிலையை வைத்து அரசு நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க நாமே முன்வருகிறோம் என இவ்வளவு முன் நடவடிக்கை மேற்கொண்டாலும் துறை நிர்வாகிகள் ஏன் மெத்தனப்போக்கோடு செயல்படுகிறார்கள் எனத் தெரியவில்லை.

2தினங்களுக்கு முன்னர் கீழக்கரை மக்களின் அச்சத்திற்க்கு காரணம் அரசு நிர்வாகம் மற்றும் சுகாதார துறை கவனக்குறைவே என நாங்களே குற்றம் சாட்டிய நிலையில் இதுபோன்று தொடரும் தேவையில்லாத மக்கள் பதட்டத்தை முறைப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு நகராட்சி நிர்வாகத்திற்க்கு உண்டு.அதை உணரந்து அதிகாரிகள் கவனத்தோடு செயல்பட வேண்டும் என வேண்டுகிறேன் என SDPI மாநில பொது செலாளர் அப்துல் ஹமீது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!