Home செய்திகள் கீழக்கரையில் SDPI கட்சியின் 9வது ஆண்டு துவக்க விழா..

கீழக்கரையில் SDPI கட்சியின் 9வது ஆண்டு துவக்க விழா..

by ஆசிரியர்

இன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரை நகர் சார்பாக நகர் தலைவர் குதுப்பு ஜமான் மற்றும் செயலாளர் கீழை அஸ்ரப் தலைமையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் துவக்கமாக முஸ்லீம் பஜார் பகுதியில் எஸ்.டி. பி.ஐ. கட்சியின் 12.வது வார்டு தலைவர் ஷாஹுல் ஹமீது கட்சி கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து SDPI கட்சியின் வடக்கு கிளை தலைவர் நதிர் SDPI கட்சி கடந்து வந்த பாதைகளை பற்றி சிறிது உரை நிகழ்த்தினார்கள். அதேபோல் மின்ஹாஜியார் பள்ளி எதிரில் நகர் அலுவலகத்தில் நகர் தலைவர் குதுப்பு ஜமான் கட்சி கொடியை ஏற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் நகர் தலைவர் முபிஸ் முஃபசல் மற்றும் நகர் நிர்வாகிகள், செயல்வீரர்கள் SDPI கட்சியின் நகர் மற்றும் வார்டு நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பலர் கலந்து கொன்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com