Home செய்திகள் மாநில அளவில் அறிவியலில் படைப்பில் முத்திரை பதிக்கும் ப்யர்ல் மெட்ரிக் கீழக்கரை மாணவன்…

மாநில அளவில் அறிவியலில் படைப்பில் முத்திரை பதிக்கும் ப்யர்ல் மெட்ரிக் கீழக்கரை மாணவன்…

by ஆசிரியர்

கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த பசீர் மறைக்கா மகன் செய்யது ஹஃக்பில் மறைக்கா. இவர் கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளியில் மேல் நிலை படிப்பு படித்து வருகிறார்.  இவர் சிறுவயதிலேயே அறிவியல் பாடத்தில் மிகுந்த ஆர்வத்துடன் மட்டுமல்லாமல் பல கண்டுபிடிப்புகளை படிப்பதில் முனைப்பாகவும் இருந்து வந்துள்ளார்.

நேற்று திண்டுக்கல் க்ரீன் வேலி பப்ளிக் பள்ளயில் Organisation of Muslim Educational Institution & Association of Tamilnadu (OMEIAT) மற்றும் TAMILNADU SCHOOLS WELFARE ASSOCIATION(TISWA) இணைந்து நடத்திய REGIONAL SCIENCE FAIR 2018 நிகழ்வில், மாநில அளவில் பல பள்ளிகள் இருந்த 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பிரிவில் கலந்து கொண்டு பல நூறு மாணவர்கள் மத்தியில்  தன்னுடைய கண்டுபிடிப்பிற்கு மாநில அளவில் முதல் பரிசை வென்றுள்ளார்.

இந்நிகழ்வுக்கு OMEIAT அமைப்பு பொதுச் செயலாளர் சாதிக், TISWA தலைவர் ஜெய்னுல் ஆப்தீன் மற்றும் USA Michigan State University, Clinical Associate Professor காஜி.S..அஜார் ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றி பெற்ற மாணவர்களை தேர்ந்தெடுத்தனர்.  தமிழகத்தின் TISWA அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அல் பையினா பள்ளியின் தாளாளர் ஜாஃபிர் சுலைமான்  அனைத்து பள்ளிகளையும் ஓருங்கிணைத்து பரிசளிப்பு விழாவிலும் பங்கேற்றார்.

இம்மாணவன் செய்யது ஹஃக்பில் மறைக்கா, சுனாமி தாக்குதலை முன் எச்சரிக்கையாக அவர் கண்டுபிடித்துள்ள கருவியில் பதிவு செய்யப்பட்ட அலை பேசி எண்களுக்கு எச்சரிக்கை அனுப்பும் தன்மையை கொண்டது.  இக்கருவியை இன்னும் மேம்படுத்தி முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பட்சத்தில் ஆபத்து காலங்களில் உயிர் சேதங்கள் மற்றும் பொருள் சேதத்தையும் தடுக்க முடியும்.

இம்மாணவர் வள்ளுவரின் வக்கான “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்” என்பதை மெய்படுத்தி வருகிறார் என்றால் மிகையாகாது. இம்மாணவனை வாழ்த்துவதில் கீழை நியூஸ் நிர்வாகம் மகிழ்ச்சி அடைகிறது.  நீங்களும் வாழ்த்த விரும்பினால் +91 80127 11656 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!