Home செய்திகள் மருத்துவ முறையுடன் கூடிய பாடம், அசத்தும் அரசு உதவிபெறும் பள்ளி.

மருத்துவ முறையுடன் கூடிய பாடம், அசத்தும் அரசு உதவிபெறும் பள்ளி.

by mohan

பொதுவாக குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு வரும் போது இருக்க மான முகத்துடனே வருவர்கள், புத்தகச் சுமை பாடச்சுமை வீட்டுச் சுமை போன்றவைகள் பள்ளிக் குழந்தைகளை அவ்விதத்தில் மாற்றுகிறது. இவற்றை மாற்றி காலையில் பள்ளி வரும் குழந்தைகளை உற்சாகமான மனநிலைக்கு மாற்ற இயற்கை மருத்துவ முறையை கையாண்டு வருகிறார் உசிலம்பட்டியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவண்டன்பட்டி ரோட்டில் உள்ளது நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளியான இப்பள்ளியின் தலைமையாசிரியர் மதன் பிரபு பள்ளிக் குழந்தைகளின் அக்கரையில் ஒவ்வொரு வருடமும் புதுப்புது முயற்சிகளை கையா ண்டு வருகிறார். இதேபோல் இந்த ஆண்டு பள்ளி துவங்கியதில் இருந்தே புத்துணர்ச்சியாகவும் உற்சாகத்துடனும் மாணவ மாணவிகள் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்திலேயே முதன் முறையாக இயற்கை மருத்துவ முறையை அறிமுகம் செய்துள்ளார், இதன்படி காலையில் பள்ளிக்கு வந்தவுடன் ஆசிரியர்கள் உள்பட பள்ளிக்குழந்தைகள் அனைவரும் சிரிப்பது, தோப்பு கரணம் போடுவது என இரு விதிமுரைகளை நடைமுறை படுத்தி உள்ளார். காலையில் தோப்புக்கரணம் போடுவதால் மாணவ மாணவிகளின் நினைவாற்றல் அதிகமாகிறது தினமும் சிரிப்பதால் மன உளைச்சல் நீங்கி மனதில் புத்துணர்ச்சியுடன் மாணவ மாணவிகள் பாடத்தில் நாட்டம் செலுத்தி நல்ல நிலைக்கு வருவார்கள், மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட இவ்விரு ஆசனங்களையும் நடைமுறையில் பள்ளியில் செயல்படுத்தியது சிரிப்பாகவும் கிண்டலாகவும் தோன்றினாலும் இதிலுள்ள பலன்களைக் கண்ட ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் ஏற்றுக் கொண்டு உற்சாகத்துடன் தினமும் செய்து வருகின்றனர். தலைமை ஆசிரியரின் இந்த முயற்சியை பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களும் சமூக ஆர்வ லர்களும் வரவேற்றுள்ளனர், புத்தகச் சுமையுடன் வரும் குழந்தைகளை புத்துணர்ச்சியுடன் வீட்டுக்கு அனுப்பும் இத்திட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்பாகும். செய்தியாளர் சங்கர் மதுரை புறநகர் .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!