இராமநாதபுரம் பள்ளி கல்வித்துறை சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

இன்று (27-03-2018) இராமநாதபுரம் பள்ளி கல்வித்துறை சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. இப்பேரணியை அரண்மனை முன்பு முதன்மை கல்வி அலுவலர் முருகன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

இப்பேரணி முக்கிய வீதி வழியாக கேணிக்கரை, புதிய பேருந்து நிலையம் வழியாக மாணவ மாணவிகள் மது ஒழிப்பிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் பாத கைகளை ஏந்தி இறுதியாக சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வருகை தந்தனர்.

பின்னர் நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஒவியம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் முதன்மை கல்வி அலுவலர் முருகன் வழங்கினார்.

இந்நிகழ்வில் முதன்மை கல்வி நேர்முக உதவியாளர் மோகனதாஸ், மாவட்ட கல்வி அலுவலர் பிரேம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, ஜெ.ஆர்.சி கன்வீனர் ரமேஷ், சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பால் மாறான் ஆகியோர்க லந்து கொண்டனர்.