Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஏர்வாடி அருகே வகுப்பறை கட்டடம் இன்றி மாணவ, மாணவியர் அவதி: பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு

ஏர்வாடி அருகே வகுப்பறை கட்டடம் இன்றி மாணவ, மாணவியர் அவதி: பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஜன.7 – இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஆதம்சேரி நடுநிலைப்பள்ளி ஏர்வாடி அருகே பிச்சைமூப்பன்வலசை கடற்கரை கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு 134 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 5 ஆம் வகுப்பறை கட்டடம் விரிசல் ஏற்பட்டதால் ராமநாதபுரம் பள்ளிக்கல்வி பரிந்துரையில் 2020 ஆம் ஆண்டு அப்போதைய கலெக்டர் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. இதற்கு மாற்று கட்டடம் மூன்று ஆண்டுகளாகியும் கட்டித்தரப்படவில்லை. இதனால் போதிய வகுப்பறையின்றி 5 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் மர நிழல், இதர வகுப்பறை கட்டடங்களின் தாழ்வார நிழலில் அமர்ந்து பயின்று வந்தனர். இது தொடர்பாக இப்பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோர் 2023 டிச.11 ல் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். தற்போது மழைக்காலம் ஓய்ந்து பனிக்காலம் துவங்கியதால் நீண்ட நேரம் தொடரும் பனியால், திறந்த வெளியில் அமர்ந்து பயிலும் மாணவ, மாணவியரின் ஆரோக்கியம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கடந்த 2012 ஆண்டு முதல் தற்போது வரை இடிக்கப்பட்ட கட்டடத்திற்கு மாற்று கட்டடம் கட்டித்தரக் கோரி ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு மாணவ, மாணவியரின் நலன்கருதி, பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை நாளை(டிச.8) முதல் பள்ளிக்கு அனுப்ப மறுத்து உள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com