Home செய்திகள் பிள்ளைகளுக்கு பொருள் சேர்த்து வைப்பதை விட சிக்கனமாக இருக்க பெற்றோர் பழகி கொடுங்கள் : திருச்சி போலீஸ் அதிகாரி (ஓய்வு) பேச்சு….

பிள்ளைகளுக்கு பொருள் சேர்த்து வைப்பதை விட சிக்கனமாக இருக்க பெற்றோர் பழகி கொடுங்கள் : திருச்சி போலீஸ் அதிகாரி (ஓய்வு) பேச்சு….

by ஆசிரியர்

இராமநாதபுரம் வாணி வேலு மாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி 9 ஆம் ஆண்டு விழா நடந்தது. சக்கரக்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.நூர்முகமது தலைமை வகித்தார். வேலு மாணிக்கம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர்கள் வி.ஜெகநாதன், வேலு.மனோகரன், வி.கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பரிமளா அந்தோணி ஆண் டறிக்கை வாசித்தார். கல்வியில் சிறந்த மாணவர்கள், போட்டிகளில் வென்ற மாணவர்கள், அரசு பொது தேர்வுகளில் நூறு சதவீத தேர்ச்சி மாணவர்களை தயார்படுத்திய ஆசிரியர்கள், சிறப்பான பணியை பாராட்டி ஊழியர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு) ஏ. கலியமூர்த்தி பரிசு வழங்கி கவுரவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது: தாய் தான் ஒவ்வொருவரின் கண் முன் நடமாடும் தெய்வம். அறிவூட்டும் தந்தை நல்ல வழி காட்டி. உலகில் உன்னத நிலை எட்டிய 10 பேரில் 8 பேரின் முன் மாதிரி ஆசிரியர்களே. சாக்ரடீஸ், பிளாட் டா, அரிஸ்டாட்டில், மகா அலெக்சாண்டர் ஆகியோரின் உலக வரலாற்றை படித்தால் ஒருவர் பின் ஒருவராக தங்கள் ஆசானை முன் மாதிரியாக ஏற்று உலக வரலாற்றில் இடம் பிடித்ததை அறியலாம். மதிப்பெண் மட்டும் வாழ்க்கையல்ல. நல்ல பழக்க வழக்கங்களே. ஆசிரியரின் கட்டளைகளுக்கு கீழ் பணியாத மாணவர்கள் தான் பிற்காலத்தில் காவல் துறையினரால் தண்டிக்கப்படுகின்றனர். தப்பு செய்யும் மாணவரை தனியாக ஆசிரியர்கள் கண்டியுங்கள். பாராட்டும் போது நான்கு மத்தியில் பாராட்டுங்கள். இதற்கு மாறாக நடந்து கொண்டு அவர்களின் வெறுப்புக்கு ஆசிரியர்கள் ஆளாகி விடாதீர்கள். மாணவரின் சாதனைகளுக்கு உந்து சக்தியாக இருங்கள். பிள்ளைகள் முன் பெற்றோர் சண்டையிட்டு கொள்ளக் கூடாது. பிள்ளைகளுக்கு செல்வம் சேர்ப்பதை விட சிக்கனமாக இருக்க கற்றுக் கொடுங்கள். பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுப்பதும், அதிகம் கண்டிப்பதும் எதிர்மறை விளைவை தரும். இவ்வாறு அவர் பேசினார்.

விளையாட்டு சாதனையில் பரிசு பெற்றோர் தடகளப் போட்டிகள் பள்ளி சாம்பியன் பட்டம் . பிளஸ் 2 மாணவர் ஆகாஷ் மாநில அளவில் முதலிடம், மண்டல அளவிலான நீச்சல் போட்டிப் போட்டியில் 9 ஆம் வகுப்பு மாணவர் தரகேஸ்வரன் முதலிடம், கோலூன்றி தாண்டும் போட்டியில் பிளஸ் 1 மாணவி டான்யா சிறப்பிடம். தேசிய கராத்தே போட்டியில் 9 ஆம் வகுப்பு மாணவி டி என் ஆர் ரசிகா சிறப்பிடம், மாநில கராத்தே போட்டியில் 9 ஆம் வகுப்பு மாணவர் திவ்யன் 2ஆம் இடம், மாநில அளவிலான டிரம்ஸ் போட்டியில் 9 ஆம் வகுப்பு மாணவர் ஷேக் இப்ராஹிம் மாஸ்டர் பட்டம், மாநில அளவிலான டிரம்ஸ் போட்டியில் 7 ஆம் வகுப்பு மாணவர் ஹர்ஷாத் சிறந்த டிரம்பர் பட்டம் . மாநில அளவிலான யோகா போட்டியில் 7 ஆம் வகுப்பு மாணவர் பிரணவ் முதலிடம், தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 4 ஆம் வகுப்பு மாணவர் ஹரிஸ் ஸ்ரீனிவாஸ், 7 ஆம் வகுப்பு மாணவர் ரெமோ, 8 ஆம் வருப்பு மாணவர் கெளசிக் ஆகியோர் முதலிடம், மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 9 ஆம் வகுப்பு மாணவர் கவின், 7 ஆம் வகுப்பு மாணவர்கள் பிரணவ் செந்தூரான், கவின் ஆகியோர் முதலிடம் .

சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் புலமை தேர்வில் 4 ஆம் வகுப்பு மாணவர் எஸ். சந்தோஷ் கார்த்திக் முதலிடம், 3 ஆம் வகுப்பு மாணவி ஆர்.பிரதீபா ஸ்ரீ, 3 ஆம் வகுப்பு மாணவர் எஸ். அஹமது அஸ்பர், 3 ஆம் வகுப்பு மாணவர் சி.சந்தோஷ், 4 ஆம் வகுப்பு மாணவர் கே. டானிஷ், ஐந்தாம் வகுப்பு மாணவர் பி.தருண் வலம்புரி ஆகியோர் 2 ஆம் இடம் பிடித்து இளம் புத்திசாலி சாதனையாளர் விருது பெற்றனர். வனத்துறை, லஞ்ச ஒழிப்பு துறை, ஆயுள் காப்பீட்டு நிறுவனம், பாரதியார் நூற்றாண்டு பிறந்த நாள் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் பரிசு வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ஜவகர்லால் நேரு குழந்தைகள் அறிவியல் கூட்டமைப்பு சார்பில் நடந்த மாநில அளவிலான போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவர் கே.சச்சின் பாபு முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்கு தகுதி, மாநில அளவிலான போக்குவரத்தும், தகவல் தொடர்பும் போட்டியில் 9 ஆம் வகுப்பு மாணவர் ஆர். ரெங்கராஜா, 8 ஆம் வகுப்பு மாணவி ஜி. இலக்கியா, பிளஸ் 1 மாணவர் மது சுதன் ஆகியோர் 2 ஆம் இடம், பெங்களூருவில் நடந்த தென் மாநில அறிவியல் போட்டியில் 9 ஆம் வகுப்பு மாணவர் ஆர். ரெங்கராஜா முதலிடம், மாநில அளவிலான துளிர் அறிவியல் புதிர் போட்டியில் 10 ஆம் வகுப்பு மாணவர் புருஷோத்தமன் 5 ஆம் இடம், மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் புதிர் போட்டியில் 9 ஆம் வகுப்பு மாணவர் ரெங்க ராஜா முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com