Home செய்திகள் காவல் துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை : S.P. முரளி ரம்பா வழங்கினார்..

காவல் துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை : S.P. முரளி ரம்பா வழங்கினார்..

by ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளில் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2017-2018ம் ஆண்டுக்குரிய கல்வி உதவித்தொகைக்கான (Tamilnadu Police Centenary Scholarship Fund) காசோலையை இன்று (15.02.2019) மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் குரும்பூர் காவல் நிலையம் நெல்லையப்பன் மகள் அருணாதேவி, குருசாமி மகன் சிவ சுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம் பண்டார சிவன் மகள் மகாலெட்சுமி, முருகன் மகன் ராம்குமார் மற்றும் சரவணன், சாயர்புரம் காவல் நிலையம் முத்து வீரப்பன் மகன் சிவா, தட்டப்பாறை காவல் நிலையம் முருகன் மகள் சரஸ்வதி மற்றும் வசந்த பெருமாள், ஓய்வு பெற்ற கதிரேசன் மகன் சுனில்சிங், காவல்துறை அமைச்சுப்பணி கண்காணிப்பாளர் மாரியப்பன் மகள் காயத்ரி, ஆவண உதவியாளர் முத்துச்சாமி மகள் சுபலெட்சுமி ஆகியோர் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்

இதில், பொறியியல் பட்டப்படிப்பு (Engineering) பயில்பவர்களுக்கு ரூபாய் 15ஆயிரமும், கலை மற்றும் அறிவியல் (Arts & Science) பட்டப்படிப்பு பயில்பவர்களுக்கு ரூபாய் 7000/-ம் வழங்கப்பட்டது.

இந்த கல்வி உதவித்தொகை ஒவ்வொரு காவல் ஆண்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வழங்கப்படுகின்றன. 2017-2018ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை 5 பேருக்கு தலா ரூபாய் 15ஆயிரமும், 6 பேருக்கு தலா ரூபாய் 7000/-மும் வழங்கபட்டது, அதற்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வழங்கி நன்றாக படிக்க வேண்டும் என வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயப் பிரகாஷ் மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சத்திய நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!