சவுதி அரேபியாவில் மார்ச் 29 முதல் 90 நாட்கள் பொது மன்னிப்பு அறிவிப்பு..

சவுதி அரேபியா உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 29 முதல் 90 நாட்களுக்கு சவுதியில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு பொதுமன்னிப்பு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.  இந்த அறிவிப்பு சவுதி அரேபியாவின் துனை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இளவரசர் முகம்மது பின் நயிஃப் அல் சவுத் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் விசா காலாவதியாகியும் தங்கியிருக்கும் நபர்கள, ஹஜ் மற்றும் உம்ரா விசாவில் வந்து வெளியேறாமல் இருக்கும் நபர்கள் எந்த ஒரு தண்டனையும் அபராதமும் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறிக் கொள்ளலாம். அதே போல் முறையான ஆவணங்கள் இல்லாமல் பணி புரிபவர்களும் தங்களின் வேலைத் தகுதிகளை நேர் படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதே போல் மூன்று வருடங்களுக்கு முன்பு பொது மன்னிப்பு திட்டம் அறிவித்த பொழுது இரண்டு கோடி மக்கள் நாட்டை விட்டு வெளியேறியது குறிப்படதக்கது. இந்த அறிவிப்பு கடந்த பின்பும் சவுதியில் தங்கியிருப்பவர்கள் மீதும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீதும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அறியப்படுகிறது.