Home செய்திகள் கீழக்கரையில் சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது..

கீழக்கரையில் சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது..

by ஆசிரியர்
கீழக்கரையில் சுற்றுப்புற சுகாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ள காரணத்தினால் பொதுமக்கள் பல நோய்களுக்கு ஆளாகிறர்கள் என்ற கருத்து  பரவலாக உள்ளது. இதை தொடர்ந்து சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் இது சார்ந்த விவாதங்களும் நடந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் இன்று (02/07/2018)  கீழக்கரை நகராட்சியில் சுகாதார பணிகள் மிக கவனத்துடன், மக்களின் பிரச்சினைகள் தீரும் வண்ணம்  கவனிக்கப்பட்ட  வேண்டும் என மேலதிகாரிகள்,  நகராட்சியினரை  முடுக்கிவிட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து பல்வேறான சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன்.  இதன் ஒரு பகுதியாக குடி நீரை வழங்கும் அனைத்து வாகனங்களும் சுகாதார ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் நகராட்சி ஊழியர்கள் பிரிவாக சென்று ஆய்வு செய்து முறையான அளவில் குடிநீரில் இல்லாதவர்களுக்கு அபராதம் விதித்ததோடு அறிவுரைகளையும் நகராட்சி ஆய்வாளர்கள் வழங்கினர். அதிரடியாக ஆய்வு பணிகளை தொடங்கிய நகராட்சியின் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தகவல்:- மக்கள் டீம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!