Home செய்திகள் நிலக்கோட்டை அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்திய ஆறு பேர் கைது…

நிலக்கோட்டை அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்திய ஆறு பேர் கைது…

by ஆசிரியர்

நிலக்கோட்டை அருகே 5 லட்சம் மதிப்புள்ள மூன்று சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்த பத்திரிகை எழுத்தாளர் சவுந்தரபாண்டி. அவருடைய மனைவி லதா பூர்ணா வயது 48 இவர் திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கல்லூரியில் முதல்வராக வேலை பார்த்து வருகிறார் இவருக்கு சொந்தமான தோட்டம் திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி தொழில் பேட்டை அருகே உள்ளது.

சம்பவத்தன்று இந்த தோட்டத்தில் உள்ள மூன்று சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்திச் சென்றனர். மேலும் அங்கு வைத்திருந்த மின் வயர்கள். 3 ரோல் தடுப்பு வேலி கம்பிகள் ஆகிய வற்றையும் திருடி சென்றனர் இது குறித்து லதா பூரணம் அம்மைய நாயக்கனூர் போலீசில் புகார் செய்தனர் அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அம்மைய நாயக்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் ரபிக் நாராயணன் கண்ணன் பாலமுருகன் மற்றும் போலீசார் பள்ளபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர் அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தேனி மாவட்டம் வருசநாடு சிங்கராஜபுரத்தை சேர்ந்த சின்னசாமி வயது 38 ஆசைத்தம்பி 38 சின்னன் 45 ஆண்டிகளை 32 பரமன் 37 நிலக்கோட்டை தாலுகா குல்லலக்குண்டு ஊராட்சி உட்பட்ட கன்னிமார் நகரைச் சேர்ந்த பாண்டி வயது 42 ஆகியோர் என்பதும் லதா பூரணம் தோட்டத்தில் இருந்த சந்தன மரங்கள் தடுப்பு வேலி கம்பிகளை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!