Home செய்திகள் சவடு மண்அனுமதி என்ற பெயரில் நுதண முறையில் மணல் திருட்டில் ஈடுபட்ட 14 வாகணங்கள் பறிமுதல் ஒருவர் கைது –அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக பொது மக்கள் புகார் ..

சவடு மண்அனுமதி என்ற பெயரில் நுதண முறையில் மணல் திருட்டில் ஈடுபட்ட 14 வாகணங்கள் பறிமுதல் ஒருவர் கைது –அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக பொது மக்கள் புகார் ..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே மிகவும் வறட்சியான மாவட்டமாக கருதப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயம் இன்றி மிகவும் வறட்சியாக முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் விளங்குகின்றன. மழை பெய்யாமலும் நிலத்தடி நீர் இல்லாமலும் மரம் செடி கொடிகள் வறண்டு காணப்படுகிறது. இதற்கு இடையே இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சவடு மணல் என்ற பெயரிலும், ஆற்று மணல் என்ற பெயரிலும் ஒரு வருடம் மற்று ஏழு நாட்கள் அனுமதி என்ற பெயரில் முதுகுளத்தூர் மற்றும் திருவாடனை ஆகிய பகுதிகளில் மணல் அள்ளுவதற்கு அனுமதி பெற்று மணல் திருடபட்டு வந்தது.

இது மட்டும் இன்றி ஆளும் கட்சியே சேர்ந்த பலர் இரவு நேரங்களில் மணல் திருட்டில் ஈடு பட்டு வருகின்றனர் . இதனால் நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது . விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் இந்த முதுகுளத்தூர் பகுதி மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சி வருகிறது .

தற்போது முதுகுளத்தூர் அருகே உள்ள சாம்பக்குளம் என்ற கிராமத்தில் விளைநிலகளுக்கு இடையில் சுமார் இரண்டு ஏக்கர் நிலபரப்பில் தமிழக தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தங்களது பினாமிகளின் பெயரில் சவடு மணல் அள்ளுவதற்கு ஏழு நாட்கள் மாவட்ட கனிம வளத்துறையிடம் அனுமதி பெற்று அந்த இடத்தில் மூன்று மணல் அல்லும் எந்திரங்களை கொண்டு மணல் அல்ல முற்பட்ட போது அப்பகுதி விவசாயிகள் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தினர். பின்னர் நீண்ட நாட்களாக மணல் அள்ளாமல் இருந்தனர் நேற்று(07.02.2018) அமைச்சரின் பினாமிகள் அவ்விடத்தில் இரண்டு நாள் சவடுமண் அள்ள மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று சுமார் 60 அடி ஆழம் வரை ஆற்று மணல் அள்ளியுள்ளனர் .எனவே அப்பகுதி போராட்டத்தில் ஈடுபட்டதை தெடர்ந்து 11 லாரிகளையும் 2 பொக்லின் இயந்திரம் மற்றும் ஒரு ஜேசிபி இயந்தித்தினை கீழத்துவல் போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் லியோ என்பவரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து விசாயிகள் கூறுகையில் தங்களது பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் சுமார் 40 க்கும் மேற்பட்ட ஆழ்துளை மின் பம்புசெட் உதவியுடன் தங்களது கிராமத்தில் நெல்,மிளகாய், பருத்தி மற்றும் எள் ஆகிய பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருவதாகவும் ,அமைச்சர் மணிகண்டன் பினாமிகள் ஏற்கனவே ஒரு வருட அனுமதி என்ற பெயரில் முதுகுளத்தூர் அருகே உள்ள பூக்குளம் என்ற கிராமத்திலும் திருவாடனை அருகே உள்ள எஸ்.பி பட்டிணம் என்ற கிராமத்திலும் மணல்களை சுமார் 60 அடி ஆழம் வரை அள்ளி அந்த பகுதிகளை விவசாயங்களே இல்லாத கிராமங்களாக மாற்றி விட்டனர். தற்போது தமிழகத்தில் மணல் அல்லுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள சூழ்நிலையில் அரசு அதிகாரிகள் துணை கொண்டு சவடு மணல் அல்லுவதாக அனுமதி பெற்று எங்களது விளை நிலத்தை வாங்கி மணல் அள்ளுவதற்கு வந்துள்ளனர் .

இச்செயலால் எங்களது விவசாயங்கள் பாதிக்க படுவது மட்டும் அல்லாமல் நிலத்தடிநீர் முற்றிலும் வற்றிவிடும் என்றும் மேலும் கமுதி அருகே உள்ள தனியார் நிறுவனமான சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து பெறப்படும் உயர்மின்னழுத்த மின்சாரத்தை எடுத்துசெல்லும் மின்கம்பிகள் இந்த நிலத்தின் வழியாக செல்வதாலும் மேலும் இவர்கள் மணல் அள்ளுவதற்காக தோண்டப்பட்ட இடத்திற்கு 10 மீட்டர் தூரத்தில் இராட்சத மின்சார கோபுரம் அமைந்துள்ளது அவ்வாறு இந்த இடத்தில் மணல் அள்ளினால் இந்த மின் கோபுரம் சாய்ந்து தங்கள் கிராமத்தில் பெரும் அளவில் உயிர்சேதம் ஏற்படும் என்ற அச்சத்திலும் மணல் அள்ளாமல் தடுத்து வருகிறோம் , ஆனால் ஆளும் கட்சியே சேர்ந்த அமைச்சரும் அரசு அதிகாரிகளும் தங்களை மிரட்டி வருவதாகவும் இதனால் தங்களது உயிரே போனாலும் அமைச்சரின் பினாமிகளை மணல் அள்ள விடமாட்டோம் என்றும் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகவும், வறட்சியான மாவட்டமாகவும் கருதப்படும் இராமநாதபுரம் மாவட்டத்தில் எந்த ஒரு தொழிற்சாலைகளும் இல்லாத சூழ்நிலையில் இம்மாவட்ட மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளதாகவும் . கடந்த மூன்று வருடங்களாக பருவமழை பொய்த்து விட்டதால் இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாப்பதர்க்காவது மணல் அள்ளுவதற்கு தடை விதிக்குமாறும், திருட்டு மணல் அள்ளுவதை தடுப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!