Home செய்திகள் செயல் அலுவலரின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு சேலம், இளம்பிள்ளை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை.!

செயல் அலுவலரின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு சேலம், இளம்பிள்ளை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை.!

by Askar

செயல் அலுவலரின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு சேலம், இளம்பிள்ளை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை.!

ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தி குடிநீர் இணைப்பு பெற்றுக்கொள்ள வேண்டுமென செயல் அலுவலர் வழங்கிய அறிவிப்பு நோட்டீசை கண்டித்து இளம்பிள்ளை பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றி யம், இளம்பிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 வார்டு உள்ளது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவர்களில் பலர் தனியாக காவிரி குடிநீர் இணைப்பு பெற்று கட்டணம் செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர். ஏழை, எளிய மக்கள் தங்க ளது தெருக்களில் உள்ள பொது குடிநீர் இணைப்பின் மூலம் பயனடைந்து வரு கின்றனர். இந்நிலையில் இளம்பிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன், ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக கட்ட ணம் செலுத்தி குடிநீர் இணைப்பு பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கியதுடன், அதனை 10 நாள்களில் பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரி வித்துள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் வியாழனன்று பேரூராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டு தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடு பட்ட பெண்கள் கூறுகை யில், தினக்கூலி நெசவுத் தொழில் செய்து வரும் நாங்கள் வாடகை வீட்டில் தான் பெரும்பாலானோர் வாசிக்கின் றோம். எங்களை குடிநீர் இணைப்பு பெற்றுக் கொள்ளுமாறும், அதற்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்றும், ஒவ்வொரு மாதமும் குடிநீர் கட்டணமாக 300 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கின்ற னர். ஏற்கனவே தொழில் நெருக்கடி யால் வீட்டிற்கு வாடகை கூட கட்டமுடி யாத நிலையில் தவித்து வருகின் றோம். ஆகவே, இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். மேலும், புதிய குடிநீர் இணைப்பு கட்டண தொகை எவ்வளவு என்று அலுவலத்தில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதேநேரம், பேரூராட்சி அலுவல கத்தில் செயல் அலுவலர் உள்ளிட்ட அதி காரிகள் யாரும் இல்லாததால் அங்கிருந்த ஊழியர்கள், இரண்டு நாட்களில் செயல் அலுவலர் வந்துவிடுவார். அதன் பின்னர் வந்து முறையிடுங்கள் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!