பள்ளபட்டியில் கொசுவை ஒழிக்க புதிய முயற்சி..

கரூர் மாவட்டம் பள்ளபட்டியிலுள்ள சாக்கடைநீர் தேங்கியுள்ள குட்டைகளில், கொசு உற்பத்தி அதிகமாகிவருகிறது., இதனால் அப்பகுதியில் வசிப்போர்களுக்கு மலேரியா, டைபாய்டு, மர்ம காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது.

இதனால் சாக்கடை குட்டைகளிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களைகட்டுபடுத்த, “பள்ளபட்டி மக்கள் வாட்ஸ்ஆப் குழூ” நண்பர்கள் – மரத்தூளுடன் கழிவு ஆயில் சேர்த்து, உருளைகளாக அமைத்து, அவற்றினை சாக்கடை கழிவுநீர் குட்டையில் போட்டுள்ளார்கள். இதனால் கழிவு ஆயில் முழுவதுமாக சாக்கடைக்குட்டையில் பரவி, கொசுக்கள் உற்பத்தியை கட்டுபடுத்தபடுகிறது என்பதாக பள்ளப்பட்டி வாட்ஸ் அப் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .