மதுரையில் தகவல் உரிமை சட்டம் திருவிழா 2015…

மதுரையில் வரும்  18/11/2018 அன்று காந்தி மியூசியம் எதிரில் உள்ள  பூங்கா முருகன் கோவில் சஷ்டி மண்டபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2015 திருவிழா கொண்டாடப்பட உள்ளது.

இந்நிகழ்வின் நிகழ்ச்சி நிரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காலை 8.30 : வருகை பதிவு துவக்கம். காலை 9.30 : தமிழ்தாய் வாழ்த்து. காலை 9.32 : தகவல் அறியும் உரிமைச் சட்ட வகுப்பு ( டிஜிட்டல் LED வகுப்பு ). காலை 12.00 : 1000 தகவல் அறியும் உரிமைச் சட்ட மனு எழுதும் சாதனை நிகழ்வு. பகல் 1.00 : உணவு இடைவேளை. பிற்பகல் 2.00 : இணையத்தின் வழியாக இந்தியாவை திருத்துவோம் (அரசையும் குடிமக்களையும் இணைக்கும் பல இணையதளம் குறித்த வகுப்பு). மாலை 4.00 : விருதுகள் கௌரவிப்பு 1000 தகவல் அறியும் உரிமைச் சட்ட மனு எழுதியவருக்கு சான்றிதழ் வழங்குதல். மாலை 5.00 : கேள்வி பதில் நிகழ்ச்சி. மாலை 6.00 : தேசிய கீதம். மாலை 6.02 முதல் இரவு 8.00 மணி வரை சமூக ஆர்வலர்கள் அறிமுகம் நடைபெறும்.

இந்நிகழ்வு நன்கு திட்டமிட்டு நடத்தப்படுவதால் முன்பதிவு அவசியம், ஆகவே முன் பதிவு செய்ய பாண்டிய ராஜன் என்பவரை  9442131019 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த நிகழ்வை மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் கீழை நியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்)