இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்

இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் புதிய நிர்வாகக்குழு தேர்வு மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியை இந்திராகாந்தி தலைமையில் நடைபெற்றது. புதிய நிர்வாக குழு தலைவராக சசிகுமார், செயலாளர் பகுர்தீன், பொருளாளராக கண்ணன், ஒருங்கிணைப்பாளராக அப்பாஸ், துணைத் தலைவராக காஜா, துணைச் செயலாளர் ஜெயக்குமார், துணைப் பொருளாளர் ஆசிரியர் சதக் , கௌரவ ஆலோசகராக கந்தசாமி, கேஷர்கான்,ஆசிரியை ஜோதி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். கூட்டத்தில் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதும் , நன்கு படிக்கும் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நிதி உதவி அளிப்பதும் தீர்மானிக்கப்பட்டது.இந்நிகழ்வில் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னாள் மாணவர்கள் சங்க துணைச் செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.