கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக சிறந்த சேவை புரிந்தோருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி 02.04.17 அன்று முகம்மது சதக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. 2016 – 2017 ஆம் ஆண்டுக்கான ஐந்து பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கீழக்கரை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தாவூத்கான், கிளீன் கீழக்கரை ஒருங்கிணைப்பாளர் சட்டப் போராளி அபு சாலிஹ், ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் சுரேஷ், வனக்காப்பாளர், தனியார் வங்கி ஊழியர் சுகன்யா ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர்.
இவ்விருதுகளை ரோட்டரி கவர்னர் டாக்டர் விஜயகுமார் வழங்கி கவுரவித்தார். ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் முஹம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் பேராசிரியர் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் ஹைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர் ஜவஹர் சாதிக், முன்னாள் தாளாளர் செய்யது இப்ராகீம் மற்றும் பள்ளி, கல்லூரியின் ஆசிரிய பெருந்தகைகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் டாக்டர் ராசிக்தீன், முகம்மது ரபி, சுப்பிரமணியன், சதக்கத்துல்லா, செல்வ நாராயணன், சுந்தரம் உட்பட பலர் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.
You must be logged in to post a comment.