இராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டில் நகை கொள்ளை..

இராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தான் அன்பு நகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் ஜெகனாதன். இவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி ராமேஸ்வரி. ராமநாதபுரம் சைல்டு லைன் மையத்தில் அணி உறுப்பினராக உள்ளார். 07. 9.18 இரவு 6:30 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு பாரதி நகரில் உள்ள மகள் வீடு சென்றார். 08. 9.18 அன்று மகளின் திருமண நாள் கொண்டாட்டம் முடித்து பணிக்குச் சென்ற ராமேஸ்வரி அன்று மாலை 6 : 45 மணியவில் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பிரதான கேட் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் முன்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதிலிருந்த 21 பவுன் நகை, ரூ.4 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. ராமேஸ்வரி புகாரின் பேரில் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.