கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 30-வது சாலை பாதுகாப்பு வார விழா..

நேஷனல் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 30-வது சாலை பாதுகாப்பு வாரவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல் நாள் நிகழ்ச்சியாக கோவில்பட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கிளை மேலாளர் ரமேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளிடம் சாலைபாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரங்கள் மற்றும்; சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்தியை பார்வையிடச் செய்தது மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து உதவிப் பொறியாளர் சரவணன் சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுரையாற்றிச் சிறப்புச் செய்தார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நாலாட்டின்புதூர் உதவி காவல் ஆய்வாளர் ஜீடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி மாணவ-மாணவிகளிடம் சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் கொடுத்தும், கல்லூரி மாணவர்களின் இருசக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளில் விபத்துக்களை தவிர்த்திட உதவிடும் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். இதனைத்தொடர்ந்து சாலை விபத்துகளை தவிர்ப்பதில் இளையோர் பங்கு குறித்தும், கார்களில் சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் கல்லூரி மாணவ-மாணவிகளிடம் தக்கச் சான்றுகளுடன் விரிவாக எடுத்துரைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் நாலாட்டின்புதூர் காவல் அலுவலர் தீலிப் மாணவ-மாணவிகளிடம் சாலைபாதுகாப்பு குறித்து குறித்து விழிப்புணர்வுரையாற்றிச் சிறப்புச் செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி இயக்குனர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் முனைவர் சண்முகவேல் மற்றும் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ–மாணவியர்கள் செய்திருந்தனர்.