பரமக்குடி அருகே விபத்து 2 பேர் பலி. ..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி – பார்த்திபனூர் அருகே கமுதியிலிருந்து பார்த்திபனூர் நோக்கி வந்த காரும், சிவகாசியிலிருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த வேனும் பார்த்திபனூர் அருகேயுள்ள தேவனேரி விளக்கில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மாயாகுளத்தை சேர்ந்த மோசஸ் மகன் பால்ஜேம்ஸ்ராஜ் வயது 23, ஆண்டிப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் பொன்கார்த்திகேயன் வயது 24 ஆகிய இருவரும் நிகழ்விடத்தில் பலி ஆயினர்.

இச்சம்பவத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  நண்பரின் திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.விபத்து குறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரனை.